நடிகை பூனம் பாண்டே ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தனது ஆண் நண்பர் சாம் அகமதுடன் சொகுசு காரில் சென்றதாகவும், அதனால் அவரை மும்பை காவல் துறையினர் கைது செய்ததாகவும் நேற்று சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இதைக் கண்ட நெட்டிசன்கள், பூனம் பாண்டேவை கடுமையாகச் சாடினர்.
இந்நிலையில் இதுகுறித்து பூனம் பாண்டே விளக்கம் அளித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் நேற்று முழுவதும் படம் பார்த்துக் கொண்டு இருந்தேன். தொடர்ந்து மூன்று படங்கள் பார்த்தேன். அப்போது நான் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
- View this post on Instagram
Guys I heard I got arrested, While I was having a movie marathon last night.
">
நான் கைது செய்யப்படவில்லை. தயவுசெய்து நான் கைது செய்யப்பட்டதாக யாரும் எழுத வேண்டாம். நான் நன்றாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார். இதன்மூலம் பூனம் பாண்டே கைது செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: களரி கற்கும் அதிதி ராவ்