ETV Bharat / sitara

நண்பருடன் ஊர் சுற்றிய பூனம் பாண்டே கைது! - latest tamil cinema news

மும்பை: ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறியதன் காரணமாக நடிகை பூனம் பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.

பூனம் பாண்டே
பூனம் பாண்டே
author img

By

Published : May 11, 2020, 3:23 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி மக்கள் வெளியே வரக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பூனம் பாண்டே தனது நண்பர் சாம் பாம்போவுடன் நேற்று இரவு பி.எம்.டபிள்யூ சொகுசு காரில் மும்பை பகுதியில் ஊர் சுற்றியுள்ளார். எந்தவித காரணமுமின்றி ஊர் சுற்றியதால், அவரை மும்பை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவருடைய பி.எம்.டபிள்யூ சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நோய்த் தொற்று பரவுவதற்கு காரணமாகும் வகையில் பொறுப்பில்லாமல் இருந்தது, சட்டத்தை மதிக்காதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பாலிவுட் சென்ற அசோக் செல்வன் திரைப்படம்
!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.