ஹைதராபாத்: பூஜா ஹெக்டே தனது ‘ராதே ஷியாம்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ராதே ஷியாம் படத்துக்காக ஒதுக்கப்பட்ட 30 நாட்கள் முடிந்தது. தற்போது வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன். ஹைதராபாத் -- மும்பை என குறிப்பிட்டுள்ளார்.
ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இத்திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.