இயக்குநர் ப்ரெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. இதில் பார்த்திபன், பாக்கியராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்துள்ள இத்திரைப்படம், கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் கரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேரடியாக OTTஇல் வெளியாகவுள்ளது என தகவல் கசிந்தது. இதற்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கு ஆதரவு தெரிவித்தது.
-
Official Announcement 📢: 7 films to have direct OTT release in Amazon Prime
— LetsOTT GLOBAL (@LetsOTT) May 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Everything we know - https://t.co/yrMg9UGBvD#PonMagalVandhal - May 29#GulaboSitabo - June 12#Penguin - June 19 #Law - June 26
#FrenchBriyani - July 24#ShakuntalaDevi - TBA#SufiyumSujatavum - TBA pic.twitter.com/732Wcer3id
">Official Announcement 📢: 7 films to have direct OTT release in Amazon Prime
— LetsOTT GLOBAL (@LetsOTT) May 15, 2020
Everything we know - https://t.co/yrMg9UGBvD#PonMagalVandhal - May 29#GulaboSitabo - June 12#Penguin - June 19 #Law - June 26
#FrenchBriyani - July 24#ShakuntalaDevi - TBA#SufiyumSujatavum - TBA pic.twitter.com/732Wcer3idOfficial Announcement 📢: 7 films to have direct OTT release in Amazon Prime
— LetsOTT GLOBAL (@LetsOTT) May 15, 2020
Everything we know - https://t.co/yrMg9UGBvD#PonMagalVandhal - May 29#GulaboSitabo - June 12#Penguin - June 19 #Law - June 26
#FrenchBriyani - July 24#ShakuntalaDevi - TBA#SufiyumSujatavum - TBA pic.twitter.com/732Wcer3id
இதேபோன்று நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவான 'பெண்குயின்' திரைப்படமும் டிஜிட்டலில் வெளியாகும் என படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
தற்போது இந்த இரு படங்களும் அமேசான் பிரைமில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் மே 29ஆம் தேதியும் 'பெண்குயின்' திரைப்படம் ஜூன் 19ஆம் தேதியும் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘பொன்மகள் வந்தாள்’ அமேசானில் வெளியாவதை வரவேற்போம் - இயக்குநர் ஹரி உத்ரா