ETV Bharat / sitara

'நிச்சயம் இது உங்களை இருக்கையின் நுனிக்கு கொண்டுவரும் படமாக இருக்கும்' - பொன்மகள் வந்தாள் திரைப்படத்தின் கதை இது

ஜோதிகா நடிப்பில் அமேசான் ப்ரைம் தளத்தில் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் குறித்த கதைக்கரு ஆங்காங்கே பகிரப்பட்டுவருகிறது. இந்நிலையில் OTTயில் வெளியாகியிருக்கும் கதை குறித்து நடிகர் சூர்யா, ஜோதிகா தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

Ponmagal vanthal released in amazon prime

author img

By

Published : May 29, 2020, 2:36 PM IST

2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்து ஜே.ஜே. ஃப்ரெட்ரிக் இயக்கியிருக்கும் திரைப்படம் 'பொன்மகள் வந்தாள்'. இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜோதிகா, பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். தவறாக தண்டனை அளிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதி வழங்கிடப் போராடும் ஒரு நேர்மையான பெண் வழக்கறிஞரின் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் இன்று அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நடிகை ஜோதிகா கூறுகையில், 'பொன்மகள் வந்தாள்' படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்பதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு நடிகரும் தங்கள் நடிப்பை அதிக உயரத்திற்கு கொண்டுசெல்லும் சவாலான பாத்திரங்களைத் தேடுவார்கள், இதில் வெண்பா கதாபாத்திரம் எனது சிறந்த நடிப்பினை வெளிக்கொணர்ந்துள்ளது.

நீதிக்காக எந்தவொரு எல்லைக்கும் போகத் தயாராக உள்ள ஒரு வலுவான பெண் கதாபாத்திரத்தை சித்தரிக்கும் இந்தத் திரைப்படத்தில் நடித்தது எனக்கு பெருமையை அளிக்கிறது. தமிழ் திரைப்பட ஆர்வலர்களும், உலகளாவிய பார்வையாளர்களும் இந்தப் படத்தை பார்க்கையில், நிச்சயம் தங்கள் இருக்கையின் நுனிக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன்' என்றார்.

Ponmagal vanthal released in amazon prime
ஜோதிகா

நடிகர் சூர்யா கூறுகையில், 'ஒவ்வொரு நடிகரும் தங்களை முழுமையாக அர்பணிக்கத்தக்கப் படங்களை தங்கள் வாழ்வில் சந்திப்பர். இது ஜோதிகாவுக்கு அத்தகையதொரு படம் ஆகும். ஒரே படத்தில் ஐந்து மூத்த நடிகர்களுடன் பணியாற்றுவதில் அவர் மிகவும் உற்சாகமடைந்தார். ஒரு இளம் இயக்குநர் தனது திரை வாழ்வின் ஆரம்பகட்டத்தில், இவ்வளவு தீவிரமான கதையை எங்களிடம் கொண்டுவந்தது பாராட்டுதலுக்கு உரியதாகும்.

இந்தத் தொற்று நோயின் சோதனையான காலகட்டத்திலும், பொருத்தமாக உணரக்கூடிய வகையில் பாத்திரத்தையும் கதையையும் ஃப்ரெட்ரிக் எழுதியுள்ளார். எந்தவொரு படமும் வெளியிடப்படும்போது, பார்வையாளர்களை சிந்திக்க அல்லது விவாதிக்க வைக்கும் விஷயங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஜோவின் திரைப்படங்கள் சமூகத்தின் நல்வாழ்வுக்காக அதை மீண்டும் மீண்டும் செய்துள்ளன.

படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தவுடன், ஆண்கள், பெண்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். நானும் த்ரில்லர்களின் மிகப்பெரிய ரசிகன். இந்தப் படம் பார்வையாளராகவும் தயாரிப்பாளராகவும் என்னை திருப்திப்படுத்தியுள்ளது. இந்த உள்ளடக்கத்தை 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் எடுத்துச் செல்லும் அமேசான் ப்ரைம் வீடியோவுடன் இணைந்திருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என தெரிவித்தார்.

இதையும் படிங்க...’படத்தை இனி இணையத்தில் வெளியிடட்டும்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.