பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங், கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சுஷாந்தின் மரணம் தொடர்பாக, சிபிஐ அலுவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் சுதந்திர தினத்தன்று, சுஷாந்த் சிங் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தேசிய அளவில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இதுகுறித்து சுஷாந்த் சிங்கின் சகோதரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "சுஷாந்த் சிங்கிற்காக 101 நாடுகளைச் சேர்ந்த மக்கள் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அவர்கள் அனைவரும் இந்து, கிறிஸ்டியன், இஸ்லாமியர் என்று மத வேறுபாடின்றி, சுஷாந்திற்காக காயத்ரி மந்திரம் கூறி, பிரார்த்தனை செய்தனர்.
உண்மை மற்றும் நீதிக்காக கடவுள் நம்மை எப்போதும் ஒற்றுமையாக வைத்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெரிகிறது. எங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்த அனைத்து மக்களுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.