மலையாளத்தில் அறிமுக இயக்குநர் கே.சன்பீர் இயக்கத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பீஸ்'. இதில் சித்திக், ரம்யா நம்பீசன், அதிதி ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்றது. டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் இதில் ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கார், பேருந்து, பறவையின் இறக்கை உள்ளிட்டவை இந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. இதற்குப் படக்குழுவினர் அனைவரும் விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். விரைவில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.