ETV Bharat / sitara

உண்மை சாகும்முன் உரக்கச் சொல்லுங்கள்! - மாணவர்களின் நிஜ வாழ்க்கை ஹீரோ ஜார்ஜ் ரெட்டி ட்ரெய்லர் - George reddy life based movie

மாணவர்களின் உரிமைக்காக போராடிய எழுச்சிப் போராளி, முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்க நிறுவனர் (PDSU), மாணவர்கள் மத்தியில் மார்க்சிய சிந்தனை விதைத்து பலரால் அறியப்படாத ஜார்ஜ் ரெட்டி வாழ்க்கை படமாகத் தயாராகியுள்ளது.

ஜார்ஜி ரெட்டி படத்தில் நடிகர் சந்தீப் மாதவ்
author img

By

Published : Oct 8, 2019, 5:47 PM IST

பாலிவுட் சினிமாக்களைப் போல் டோலிவுட்டிலும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகிவருகிறது. நடிகையர் திலகம் வாழ்க்கை வரலாறாக வெளிவந்த மகாநடி, மறைந்த முதலமைச்சர்ர் நடிகர் என்.டி. ராமராவ் வாழ்கை வரலாறாக என்.டி.ஆர். கதாநாயகடு, என்.டி.ஆர். மகாநாயகடு ஆகிய படங்களின் வரிசையில் தற்போது ஜார்ஜ் ரெட்டி என்ற படம் உருவாகியுள்ளது.

ஹைதராபாத்திலுள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் ஆராய்ச்சி மாணவராக படித்த ஜார்ஜ் ரெட்டி, கல்லூரி வளாகத்துக்குள் நடக்கும் அரசியலை எதிர்த்து மாணவர்களின் உரிமைக்காகப் போராடிய எழுச்சிப் போராளியாகத் திகழ்ந்தார். மார்க்சிய சிந்தனையை மாணவர்கள் மத்தியில் விதைத்ததுடன் அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பெற்றுத்தருவது என மாணவர்களின் தலைவனாக வலம்வந்தார்.

முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கத்தை தொடங்கிய இவர், அதன்மூலம் மாணவர்களின் தேவைகளைப் பூர்த்த செய்யும் பணிகளை மேற்கொண்டார். படிப்பிலும் சிறந்த விளங்கிய இவர், ஒரு குத்துச்சண்டை வீரரும் கூட.

1947இல் பிறந்த ஜார்ஜ் ரெட்டி சில கல்லூரிக்குள் நிகழ்ந்த அரசியல் காரணங்களால், எதிராளியால் கொல்லப்பட்டார். ஆனால் அவர் தொடங்கிய முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கம் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் இன்னும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் செயல்பட்டுவருகிறது.

ஜார்ஜ் ரெட்டியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் திரைப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் ஜார்ஜ் ரெட்டியாக தெலுங்கு நடிகர் சந்தீப் மாதவ் நடித்துள்ளார். இதையடுத்து படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். படம் மீது தெலுங்கானா ரசிகர்கள் வெறித்தனமான வெயிட்டிங்கில் உள்ளனர்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

வெளி உலகுக்கு தெரியாத ஹீரோக்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அதேபோன்று மாணவர்களின் ஹீரோவாக ஜொலித்த ஜார்ஜ் ரெட்டி கதை பலருக்கு தெரியாத நிலையில் படமாக உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Intro:Body:

உண்மை சாகும் முன் உரக்க சொல்லுங்கள்! வன்முறையை வன்முறையால் சந்திப்போம் 

மாணவர்களின் உரிமைக்காக போராடிய எழுச்சி போராளி, முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்க நிறுவனர்  (PDSU), மாணவர்கள் மத்தியில்  மார்க்சிய சிந்தனை விதைத்து பலரால் அறியப்படாத ஜார்ஜ் ரெட்டி வாழ்கை படமாக தயாராகியுள்ளது. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.