ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் ’திருடா திருடா’, ’காதலர் தினம்’, ’மே மாதம்’, ’அலைபாயுதே’ ஆகிய திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இந்த கரோனா காலத்தில் நம்முடைய வாழ்க்கை மிகவும் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏ.ஆர் ரஹ்மானின் பாடல்கள் மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது.
ஏ.ஆர் ரஹ்மான் பாடல்களை இந்த ஊரடங்கு காலத்தில் கேட்பதற்கு இதமாக உள்ளது. அதனால் அவருக்கு மிக்க நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.