சென்னை: ஆல் டைம் பேவரைட் என்று, 'தல' அஜித்தின் சூப்பர் ஹிட் படமான 'முகவரி' படத்தைக் குறிப்பிட்டு, அதில் பணியாற்றியது குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்.
இதுகுறித்து ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
'இரு தசாப்தங்களுக்கு முன்னர் வெளியான படம் 'முகவரி'. படத்தின் முதல் நாளில் இருந்தே இயக்குநர் வி.இஸெட். துரையின் அற்புதமான திரைக்கதைக்கு அனைவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி, மறக்க முடியாத படத்தைத் தந்துள்ளனர்.
குறிப்பாக அஜித், ஜோதிகா, ரகுவரன், கே. விஸ்வநாத் ஆகியோரின் நடிப்பு அனைவரையும் வசியப்படுத்தியது.
-
#Mugavari
— pcsreeramISC (@pcsreeram) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
The film was released a decade back.
From day one it was director @vzdurai's screenplay with great acting by all made it a memorable one.
#mugavari became an all time favourite thanks to social media for carrying it further till today.
Congrats @vzdurai
">#Mugavari
— pcsreeramISC (@pcsreeram) February 19, 2020

Congrats @vzdurai#Mugavari

'முகவரி' திரைப்படம் எனது ஆல் டைம் பேவரைட் படமாக இருக்கிறது. தற்போது அந்தப் படத்தை பற்றி, பேசி வரும் சமூக வலை தளங்களுக்கு நன்றிகள். இயக்குநர் வி.இஸெட். துரைக்கு வாழ்த்துகள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
2000ஆம் ஆவது ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி, வெளியான 'முகவரி' திரைப்படம், அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததுடன், தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் திரை விருதுகளில், சிறந்த குடும்ப திரைப்படத்துக்கான இரண்டாவது பரிசையும் தட்டிச் சென்றது.
படத்தில் தல அஜித், ஜோதிகா, கே. விஸ்வநாத், சித்தாரா, மணிவண்ணன், விவேக், ஜெய் கணேஷ், நிழல்கள் ரவி எனப் பலர் நடித்திருப்பார்கள்.
'தேவா' இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானதுடன், பின்னணி இசை பெரிதும் பேசப்பட்டது.
இசையமைப்பாளராக வேண்டும் என்ற தனது கனவு, லட்சியத்தை நோக்கி, அஜித் செல்லும் பயணம் என்ற ஒற்றை வரி கதையில், குடும்பப் பாசம், நட்பு, காதல், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களோடு 'முகவரி' படத்தை இயக்கியிருந்தார் வி.இஸெட். துரை.
படத்துக்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ். சக்கரவர்த்தி தயாரித்தார்.
-
Raghuvaran, K Vishwanath's performances along with Ajith's and Jyothika's mesmerised all. #Mugavari @vzdurai
— pcsreeramISC (@pcsreeram) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
#AjithKumar #Jyothika #20yearsofMugavari
">Raghuvaran, K Vishwanath's performances along with Ajith's and Jyothika's mesmerised all. #Mugavari @vzdurai
— pcsreeramISC (@pcsreeram) February 19, 2020
#AjithKumar #Jyothika #20yearsofMugavariRaghuvaran, K Vishwanath's performances along with Ajith's and Jyothika's mesmerised all. #Mugavari @vzdurai
— pcsreeramISC (@pcsreeram) February 19, 2020
#AjithKumar #Jyothika #20yearsofMugavari
இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகியிருப்பதை #20yearsofMugavari என்ற ஹேஷ்டேக்கில் இணையவாசிகள் ட்ரெண்டாக்கினர். இதையடுத்து இந்தப் படம் குறித்து, தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம்.
இதையும் படிங்க:
கோடம்பாக்கம் போகும் முன் ஸ்ரீதர் குடும்பத்து 'முகவரி' பாருங்கள்.... #20yearsofMugavaree