நடிகை, பாடகி என பன்முகம் கொண்ட ஷ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துவருகிறார். திரைத்துறையில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு நேர்காணல் மூலம் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஷ்ருதி ஹாசன் கூறுகையில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படப்பிடிப்பு தளத்தில் பாலின சமத்துவம் பார்ப்பது கிடையாது அங்கு ஹீரோக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் அங்கு அமைதி காக்கின்றனர்.
இது பற்றி நான் கருத்து தெரிவிக்கவேண்டுமென்றால் சில சமயங்களில் அது எனது பெயரையும் எனது குடும்பப் பெயரையும் கலங்கப்படுத்தி விடுகிறது. ஆணாதிக்க சமுதாயம் படத்தில் முதலில் யார் ஹீரோ என்றே பார்க்கின்றனர். பின்பு தான் ஹீரோயின் யார் என பார்க்கின்றனர்.
படப்பிடிப்பில் தான் நடித்த ஷாட்டுகளுக்குப் பின் மானிட்டர் வந்து பார்க்கும் ஹீரோக்களுக்கு இருக்கைகள் வழங்கப்படுகிறது. ஹீரோயின்கள் அருகில் இருந்தாலும் அவர்கள் கவனிப்பது இல்லை. இதில் ஒரு சில ஹீரோக்கள் அந்த இருக்கைகளை ஹீரோயின்களுக்கு வழங்குகின்றனர் என்றார்.