நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை தொடர்பாக பாட்னா, மும்பை என இரண்டு இடங்களில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், இவ்வழக்கு தொடர்பாக சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் நடிகையும், சுஷாந்த் காதலியுமான ரியா உள்ளிட்ட ஆறு பேர் மீது புகார் கொடுத்தார்.
அப்புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக பாட்னா எஸ்.பி. வினைய் திவாரி தலைமையிலான குழுவினர் நேற்று மும்பை சென்றனர். இதையடுத்து விசாரணை உடனே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வெளிமாநிலத்திலிருந்து மகாராஷ்டிரா வருபவர்கள் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கவைப்பது, கட்டாயமாக்கப்பட்டதால், எஸ்.பி. வினைய் திவாரி வலுக்கட்டாயமாகத் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பிகார் மாநில டி.ஜே.பி குப்தேஷ்வர் பாண்டே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வினைய் திவாரி தலைமையிலான குழுவினர் நேற்று மும்பை சென்றனர். அவர்களை மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் வலுக்கட்டாயமாகத் தனிமைப்படுத்தியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சுஷாந்த் சிங் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய தாமதம் ஏன்? சுப்பிரமணியன் சுவாமி கேள்வி