ETV Bharat / sitara

சர்ச்சையை கிளப்பும் பார்த்திபனின் விளக்கம்..! - assistant director jeyamkondan

சென்னை: உதவி இயக்குநர் ஜெயங்கொண்டான் அளித்த புகார் குறித்து நடிகர் பார்த்திபனை அலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கோபாமாக பதில் அளித்துள்ளார்.

பார்த்திபன்
author img

By

Published : May 9, 2019, 11:46 PM IST

நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கி, மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக உதவி இயக்குநர் ஜெயங்கொண்டான் என்பவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து ஈ.டி.வி பாரத் செய்தியாளர் தொலைபேசியின் வாயிலாக நடிகர் பார்த்திபனிடம் கேட்ட போது, 'தெருவில் நடக்கும் யாராவது என் மீது புகார் கொடுத்தால், அது குறித்து நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக நான் எதுவும் பேசவும் விரும்பவில்லை' என பதிலளித்துவிட்டு அழைப்பை கோபத்துடன் துண்டித்தார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
மதுரை - 10.05.19

தெருவில் போகிறவர்கள் சொல்லும் புகார்களுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை..கொலை செய்ய முயற்சித்த புகாருக்கு  நடிகர் பார்த்திபன் விளக்கம்..

நடிகர் பார்த்திபன் தன்னை தாக்கி, மாடியில் இருந்து தள்ளிவிட்டதாக உதவி இயக்குனர் ஜெயங்கொண்டான் என்பவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக அவர் தெரிவிக்கையில், கடந்த 10 ஆண்டுகளாக பார்த்திபன் வீட்டில் பணிபுரிந்த ஜெயங்கொண்டான், தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக நடிகர் பார்த்திபன் மீது புகார் தெரிவித்துள்ளார். பார்த்திபனின் திருவான்மியூர் வீட்டில் கொள்ளை போனதை அடுத்து ஜெயங்கொண்டான் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ள நிலையில்,  இதற்கான காரணம் குறித்து கேட்க சென்றபோது பார்த்திபன் தாக்கியதாக ஜெயங்கொண்டான் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் பார்திபனிடம் ஜெயங்கொண்டான் புகார் குறித்து கேட்ட போது, தெருவில் நடக்கும் யாராவது என் மீது கொடுத்தால் அது குறித்து நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை... மேலும், இது தொடர்பாக நான் பேசவும் விரும்பவில்லை என இ.டி.வி பாரத்திற்கு விளக்கமளித்தார்..
                                                                     
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.