தமிழ்நாட்டில் நாளை (ஏப்ரல்.06) ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்று (ஏப்ரல்.04) மாலை ஏழு மணியுடன் தேர்தல் பரப்புரை முடிவடைந்த நிலையில், நாளைய தேர்தலுக்காக வாக்காளர்களும், வேட்பாளர்களும், அரசியல் கட்சியினரும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர்.
100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழ்நாடு அரசும் பிற அமைப்பினரும் பல வகையிலும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் இயக்குநருமான ரா.பார்த்திபன், வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ”நாளை என்பது ஒரே ஒரு நாள் அல்ல... ஐந்தாண்டு கால குத்தகை! பொத்தானில் குத்துகையில் கவனம் கொள்வோம்” என அவர் ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க: ’ஆயிரத்தில் ஒருவன் 2’ - ரசிகர் உருவாக்கிய ட்ரெய்லரை வெளியிட்ட செல்வராகவன்