2016 ஆம் ஆண்டு வெளிநாடுகளில் முதலீடு செய்தவர்களின் பட்டியல் பனாமா ஆவணம் சென்ற பெயரில் வெளியானது. இந்த பட்டியலில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்று பெரும் சர்ச்சையை கிளப்பியது.
அதில் நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது குடும்பத்தினர், அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டு முறை சம்மன் அனுப்பட்டது .
அப்போது தனக்கு கால அவகாசம் வழங்குமாறு ஐஸ்வர்யா ராய் கோரிக்கை விடுத்திருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் விசாரணைக்கு ஆஜராகுமாறு இன்று (டிசம்பர் 20) அமலாக்கத்துறையினர் மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பு நிறைவு!