அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பேட்மேன். மாதவிடாய் பிரச்னையின்போது பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களை குறைந்த விலையில் தயாரித்து கொடுத்த அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இத்திரைப்படம் இந்தஸ் வேலி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. அதுவும் அங்கு முதல் திரைப்படமாக திரையிடப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சி அக்டோபர் 2ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இச்செய்தியை படத்தின் இயக்குநர் பால்கி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.