அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கிய பா. ரஞ்சித் ஆர்யாவை வைத்து பாக்சிங் தொடர்பான படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக ஆர்யா வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்து உடல் எடையை அதிக அளவில் ஏற்றியுள்ளார். இதற்கான புகைப்படங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படத்தின் இயக்குநரான பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "சார்பட்டா" என இப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது.
![பா. ரஞ்சித் ட்விட்டர் பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9734934_aa.jpg)
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இங்க வாய்ப்பு ‘ன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல,, இது நம்ப ஆட்டம்... எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. ஏறி ஆடு.. கபிலா #சார்பட்டா" என பதிவிட்டுள்ளார்.
![சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9734934_aaa.jpg)
சிக்ஸ் பேக்கில் படு மாஸாக ஆர்யா இந்த போஸ்டரில் காட்சி அளிக்கிறார்.
இதையும் படிங்க:பா. இரஞ்சித் படத்திற்காக மாஸ்டரிடம் அடிவாங்கிய ஆர்யா - வைரலாகும் காணொலி