ETV Bharat / sitara

ரிலீசுக்கு தயாராகி தேங்கி இருக்கும் படங்களை வெளியிடுவதே முதல் முயற்சி - தயாரிப்பாளர் சங்க புதிய தலைவர் முரளி

author img

By

Published : Nov 23, 2020, 11:34 AM IST

Updated : Nov 23, 2020, 3:00 PM IST

ரிலீசுக்கு தயாராகி வெளியிடாமல் தேங்கி இருக்கும் படங்களை வெளியிடுவதற்கான முயற்சிகளை முதல் கட்ட நடவடிக்கையாக எடுப்போம் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமநாராயணன் கூறியுள்ளார்.

Producer council president Murali
தயாரிப்பாளர் சங்க புதிய தலைவர் முரளி

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று (நவ. 23) காலை நடைபெற்ற நிலையில், அதிக வாக்குகள் பெற்று தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமநாராயணன் வெற்றி பெற்றுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று (நவ. 21) நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் பிரிந்து, தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் எனத் தொடங்கி உள்ளனர். இதற்கு பாரதிராஜா தலைவராக இருக்கிறார். இதில் பதிவியில் உள்ள நிர்வாகிகள் யாருமே, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடவில்லை.

முன்னணி தயாரிப்பாளர்கள் பலர் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடாத நிலையில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்கு நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் டி.ராஜேந்தர், ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமநாரயணன், தயாரிப்பாளர் தேனப்பன் பி.எல். ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பி.எல்.தேனப்பன் எந்தவொரு அணியையும் சாராமல் தனியாகப் போட்டியிட்டார்.

தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் ஆயிரத்து 50 வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமநாரயணன் 557 வாக்குகள் பெற்றார்.

இவருக்கு அடுத்தபடியாக டி. ராஜேந்தர் 337 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், சுயேச்சையாக போட்டியிட்ட பி.எல்., தேனப்பன் 87 வாக்குகளையும் பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இதில், 69 வாக்குகள் செல்லாத வாக்குகளானது.

அதிக வாக்குகள் பெற்ற தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமநாராயணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

தேர்தல் முடிவுக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த முரளி ராமநாராயணன் கூறுகையில், “மாபெரும் மாற்றம் வரும் என ஆயிரத்து 50 நபர்கள் வாக்களித்துள்ளனர். அதில் எனக்கு 557 வாக்குகள் அளித்து, என்னை வெற்றி பெறச் செய்துள்ளனர். என்னைக் வெற்றிபெற செய்துள்ள அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நன்றி.

தற்போது துணைத் தலைவர் பொருளாளர் பொறுப்புக்கான மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் கட்ட நடவடிக்கையாக தயாராகி வெளியிடாமல் தேங்கியிருக்கும் படங்களை வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுப்போம்.

குறுகிய காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், நீண்ட நாள்களுக்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். விரைவில் அனைத்தையும் செயல்படுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நானி - நஸ்ரியா நடிப்பில் உருவாகும் தெலுங்கு படத்தின் தலைப்பு வெளியீடு

Last Updated : Nov 23, 2020, 3:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.