ETV Bharat / sitara

விரைவில் வெளியாகும் 17 சர்வதேச விருதுகளைக் குவித்த ஒற்றைப் பனைமரம்! - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்

17 முறை சர்வதேச விருதுகளை வென்ற ஒற்றைப் பனைமரம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

ஒற்றைப் பனைமரம்
ஒற்றைப் பனைமரம்
author img

By

Published : Jul 21, 2021, 4:18 PM IST

ஈழத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம், 'ஒற்றைப் பனைமரம்'. எஸ். தணிகைவேல் தயாரித்திருக்கும் இப்படம் 40 சர்வதேச திரைப்பட விழாக்களில் தேர்வாகி சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை என 17 விருதுகளையும் குவித்திருக்கிறது.

இந்தப் படத்தை 'மண்' பட இயக்குநர் புதியவன் ராசையாவே இயக்கி நடித்துள்ளார். ஈழப்போர் முடிவுறும் இறுதி நாள்களில் ஆரம்பிக்கும் இக்கதை, சமகால சூழலில் போராளிகளும், மக்களும் சந்தித்துக் கொள்ளும்வரை நீள்கிறது. இதைப் படத்தின் இயக்குநர் சுவாரஸ்யமாகப் படமாக்கியுள்ளார்.

ஒற்றைப் பனைமரம்
ஒற்றைப் பனைமரம்

நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இதில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 17 முறை சர்வதேச விருது வாங்கியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இதனை அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்களிலும் வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 4 years of vikram vedha: ஒரு கத சொல்ட்டுமா சார்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.