’ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படம் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. பார்த்திபன் எழுதி, இயக்கி, தயாரித்து நடித்துள்ள திரைப்படம் ’ஒத்த செருப்பு சைஸ் 7’. தனி நபர் மட்டும் நடிக்கும் கதையில் அதன் இயக்குநரே நடித்திருப்பது இந்தியாவில் இதுவே முதல்முறை. இதற்காக இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய சாதனைப் பட்டியல்களில் இந்தப் படம் இடம்பெற்றது. இந்நிலையில், அதிக நேரம் ரிவ்யூ செய்யப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனை ஒன்றையும் இத்திரைப்படம் படைத்துள்ளது.
ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உறுப்பினர் தலைமையில் விமர்சகர் வெங்கடகிருஷ்ணன், பார்த்திபன் இருவரும் இந்தப் படத்தை 20 மணிநேரம் ரிவ்யூ செய்துள்ளனர்.
’ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு: ராம்ஜி,
பின்னணி இசை: சி. சத்யா,
ஒலி வடிவமைப்பு: ரசூல் பூக்குட்டி.