ஹாலிவுட் சினிமாவில், மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுவது ஆஸ்கர். ஆண்டுதோறும், ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி மாதம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் 'டால்பி' திரையரங்கில் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இந்தாண்டு கரோனா வைரஸ் காரணமாக 93ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி மாதத்துக்குப் பதிலாக, ஏப்ரல் 25ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற்றது.
இதனையடுத்து அடுத்தாண்டு நடைபெறவுள்ள 94ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான திட்டமிடல் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக ஆஸ்கர் குழு வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி 94ஆவது ஆஸ்கர் விருது விழா மார்ச் 27ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விருதானது முதலில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால் அப்போது சில முக்கிய நிகழ்வுகளின் ஒளிபரப்பு இருக்கும் காரணத்தால், ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு மார்ச் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கான படங்களின் தேர்வுகள் ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதன் பின் ஆஸ்கர் ரேஸில் கலந்துகொள்ளவிருக்கும் படங்களின் பட்டியல் மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.