ஒன்பது இயக்குநர்கள் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம், 'நவரசா'. மணிரத்னம் மற்றும் ஜெயேந்திர பஞ்சாபகேசன் தயாரித்திருக்கும் இப்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள், நோய்த்தொற்று பரவலால் முடங்கியிருக்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் ஊதியம் இல்லாமல் நடித்துள்ளனர்.

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் ஆறாம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் 'துணிந்த பின்' படத்தில் இடம்பெற்றுள்ள 'உசர பறந்து வா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. மெலடி பாடலான, இப்பாடலுக்கு சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.
முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள, 'தூரிகா' பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்றது.