சென்னை: ரோல்ஸ் ராய் கார் வரி விலக்கு சர்ச்சையில் விஜய்க்கு ஆதரவாக ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் களத்தில் குதித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உழைப்பால் உயர்ந்தவர்களை அனைவரும் மனதார பாராட்ட வேண்டும். விஜய் உழைப்பால் முன்னேறியவர். ஒரு நடிகனாக அவர் கோடிக்கணக்கில் வரி செலுத்தியுள்ளார். அந்தப் பணத்தில் பல மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
எப்போதும் ஒரு மனிதனின் நிறைகளை குறைவாக பேசுவதும், குறைகளை மிகைப்படுத்தி கூறுவதும் மனித இயல்பாக இருக்கிறது. வரி விலக்கு கேட்பது அவரவர் உரிமை. நடிகர் விஜய்க்கும் அந்த உரிமை உண்டு. சச்சினுக்காக சட்டதிருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு வரி விலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.
பல கஷ்டங்களையும் விருப்பு வெறுக்களையும் கடந்து உயர்நிலைக்கு வந்தவர் விஜய், அவரை பாராட்ட மனமில்லை என்றாலும் குறை கூறுவதை தவிர்க்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: suriya 40: ரத்னவேலு வெளியிட்ட மிரட்டலான புகைப்படம்