ETV Bharat / sitara

'இளையராஜா மெட்டுக்கு பாடல்' - ரசிகர்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு? - latest cinema news

இளையராஜாவின் புதிய மெட்டுக்கான பாடல் வரிகளை எழுதி அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, ஏராளமான ரசிகர்கள் தமிழ் பாடல் வரிகளை எழுதி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

'இளையராஜா மெட்டுக்கு பாடல்' - ரசிகர்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு?

author img

By

Published : Nov 27, 2021, 8:35 PM IST

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ட்விட்டரில் தன்னுடைய புதிய பாடலுக்கான மெட்டை வெளியிட்டிருந்தார் இசையமைப்பாளர் இளையராஜா. அந்த மெட்டுக்கு தனது ரசிகர்கள், பாடல் வரிகளை எழுதி அனுப்பலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

அவற்றுள் சிறந்ததை தேர்ந்தெடுத்து பாடல் ஒன்றினை உருவாக்கப் போவதாகவும் அவர் கூறியிருந்தார். பிறமொழி ரசிகர்களும் தன்னுடைய மெட்டுக்கு பாடல் வரிகளை எழுதி அனுப்பலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இளையராஜாவின் அழைப்பை ஏற்று, தற்போது ஏராளமான ரசிகர்கள் தமிழ் பாடல் வரிகளை எழுதி அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீப நாள்களாக ட்விட்டர், யூ - டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளையராஜா தீவிரமாக இயங்கி வருகிறார். தனது ரசிகர்களுடனான தொடர்பை விரிவாக்கும் வகையிலேயே, தற்போது பாடல் வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 'தல 61'இல் இணையும் அனிருத்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.