கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 8 மாதங்களாக இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் வெளியீட்டிற்கு தயாரான பல படங்கள் வெளியாகமால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
திரையரங்குகளும் திறக்கப்படதால் அதனை நம்பியிருந்த ஊழியர்களும் உரிமையாளர்களும் பெரும் இழப்பை சந்தித்தனர்.
இந்த காலகட்டத்தில் ரசிகர்களிடையே ஓடிடி எனப்படும் ஆன்லைன் தளங்கள் மிகப்பிரபலமானது. அமேசான் ப்ரைம், நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. இந்த ஓடிடி தளங்களில் பல முன்னணி பிரபலங்களின் படங்களும் வெளியானது. இதனால் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றிக்கு தணிக்கை இல்லாதால் வன்முறை, ஆபாச காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருந்தது. மேலும் படைப்பாளர்களுக்கு சுதந்திரம் இருந்தால் தங்களது கருத்துகளை தங்கு தடையின்றி வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், ஓடிடி தளங்களில் இனி வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கண்காணிக்கும் என மத்தியரசு ஆணையிட்டுள்ளது.
குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கையெழுத்திட்ட இந்த அரசாணையில், ஓடிடி தளங்களில் வெளியாகும் கருத்துகள் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் வரும். இதில் ஒளிப்பரப்பாகும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றை ஒழுங்குப்படுத்த அமைச்சகத்திற்கு அதிகாரம் உண்டு.
இந்திய அரசியமைப்பு சட்டம் 77வது பிரிவு (3) இந்திய அரசு (வணிக ஒதுக்கீடு) விதிகள் கீழ் இது உடனடியாக நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.