ஆன்லைனில் சினிமா டிக்கெட் விற்பது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் சினிமா தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் நடிகர் எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் ராஜன் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில், சர்வர் வழியாக டிக்கெட் விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு. இதை எவ்வாறு முறைப்படுத்துவது என்பது தொடர்பாகவும், நடைமுறை சிக்கல்களை சரி செய்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. 1000 இருக்கைகள் இருப்பதை 250 இருக்கையாக மாற்றி 4 திரையரங்குகளாக அமைக்க அரசு உத்தரவிட வேண்டும். மனதிற்கு திருப்தி அளிக்கக்கூடிய ஆலோசனை கூட்டமாக இந்த கூட்டம் அமைந்தது.
தீபாவளிக்கு முன் ஆன்லைன் டிக்கெட்டை நடைமுறைப்படுத்த இயலாது. தமிழ் திரையுலகை வளர்ப்பதற்கும், பொதுமக்களுக்கு நன்மை செய்யவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசாங்கம் இதை நல்ல முறையில் செயல்படுத்த உள்ளனர். ஆன்லைன் டிக்கெட் வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் சங்கம் அக்கறையுடன் உள்ளோம் என்றனர்.