நடிகை ஸ்ரேயா தமிழில் 'எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் அறிமுகமானவர். இதன் பின் விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்', ரஜினியுடன்' சிவாஜி', விக்ரமுடன் 'கந்தசாமி' என முன்னணி கதாநாயகர்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். கடைசியாக சிம்புவின் நடிப்பில் வெளிவந்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார்.
பின் நடிகர் அரவிந்த் சாமியின் நடிப்பில் வெளியாகவுள்ள 'நரகாசுரன்' படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு சினிமாவில் போதிய வாய்ப்பு கிடைக்காததையடுத்து சில வருடங்களுக்கு முன் ஆண்ட்ரே கோஸ்சீவி என்ற டென்னிஸ் வீரரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஜாலியாக டூர் செல்லும் ஸ்ரேயா, தான் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்களை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது இபிஸா தீவில் உள்ள கடற்கரையில் பிகினி மற்றும் ஃபிஷ் நெட் உடையில் பெல்லி நடனம் ஆடும் விடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அடுத்த முறை இபிஸா தீவு வரும் வரை இத்தீவை மிஸ் பண்ணுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து இந்த விடியோவை ரசிகர்கள் அதிகமாக சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.