2014ஆம் ஆண்டு கொரியன் மொழியின் படமான 'மிஸ் கிராணி' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இப்படம் சீனா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் பேசப்படும் மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அதில் வெற்றியும் பெற்றது.
இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் நந்தினி ரெட்டி இயக்கத்தில் நடிகை சமந்தா நடிப்பில் 'ஓ பேபி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. சமந்தாவுடன் நாக சவுரியா, ராஜேந்திர பிரசாத், ஊர்வசி என பலர் நடித்துள்ளனர்.
70 வயது பாட்டி ஒருவர் புகைப்படம் எடுக்க ஸ்டுடியோ செல்கிறார். அப்போது அங்கு அவர் இளமை காலத்திற்கு திரும்புகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதை. பாட்டி கதா பாத்திரத்தில் நடிகை லட்சுமி நடித்துள்ளார்.
தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஜூலை 5ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படம் தெலுங்கில் மட்டும் வெளியாகாமல் தமிழிலும் வெளியாக உள்ளது.