சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு நடந்த சுவாதி கொலை வழக்கை அடிப்படையாக வைத்து ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரில் இயக்குநர் ரமேஷ் செல்வன் படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சுவாதியாக நடிகை ஐராவும், ராம்குமாராக மனோவும் நடித்தனர். கதாபாத்திரங்கள் பெயர்களும் சுவாதி, ராம்குமார் என்று வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் படத்தின் டீசர் வெளியானதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்து படத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியது. சுவாதியின் தந்தை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன்காரணமாக படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு கதாபாத்திரங்களின் பெயர்களும் நீக்கப்பட்டு, படத்தின் தலைப்பு 'நுங்கம்பாக்கம்' என்று மாற்றப்பட்டு தணிக்கைக் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்தும் படம் வெளியாவதில் பல பிரச்னைகள் ஏற்ப்பட்டதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், படம் பார்த்துவிட்டு படம் வெளியிடுவதில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, பாதிக்கப்பட்ட சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன், அந்தணர் முன்னேற்றக் கழகம் செயலாளர் பாலாஜிக்கும் படத்தை காண்பித்து சம்மதம் பெறப்பட்டது. மேலும் ராம்குமார் தந்தை தொடர்ந்த வழக்கு மற்றும் மற்ற வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து தடையை நீக்கியது.
இறுதியாக தற்பொழுது இந்தப் படம் வெளியீடு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் படம் அக்டோபர் மாதம் பிரபல ஓடிடி நிறுவனத்தின் மூலம் வெளியிடவுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.
ஓடிடி தளத்தில் வெளியாகும் 'நுங்கம்பாக்கம்' - நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்
சென்னை: பிரபல ஓடிடி தளத்தில் 'நுங்கம்பாக்கம்' திரைப்படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.