ETV Bharat / sitara

நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் காலமானார்..! - வேணு மாதவ் மரணம்

டோலிவுட் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வேணு மாதவ் காலமானார்.

#RIPVenuMadhav
author img

By

Published : Sep 25, 2019, 3:28 PM IST

மிமிக்ரி கலைஞராக இருந்து தனது கடின உழைப்பால் டோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக முன்னேறியவர் வேணு மாதவ். சிரஞ்சீவி, பவன் கல்யாண், மகேஷ் பாபு என டோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்கள் பலருடனும் நடித்திருக்கிறார். விவி விநாயக் இயக்கத்தில் உருவான ‘லட்சுமி’ படத்தில் டைகர் சத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக வெகுவாகப் பாராட்டப்பட்டார். இதற்காக அவருக்கு நந்தி விருது வழங்கப்பட்டது.

#RIPVenuMadhav
டைகர் சத்தி - வேணு மாதவ்

இந்நிலையில், உடல்நிலை மோசமாக இருந்த வேணு மாதவ், செகந்திராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12 மணியளவில் உயிரிழந்தார். வாழ்நாள் எல்லாம் மற்றவர்களை சிரிக்க வைத்த கலைஞனுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.