பாலிவுட் நடிகை ஆலியா பட்டிற்கு சமூகவலைதளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால், இவரை பற்றிய அனைத்து தகவல்களும் சமூக வளைதளவாசிகளுக்கு அத்துப்படி. தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரத்தையும் ஆலியா தேர்ந்தெடுத்து நடிப்பார்.
இவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் மீ-ஸ்டோர் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சமூக சேவைகளையும் செய்துவருகிறார். இவர் தற்போது 'சாதக் 2' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் உடற்பயிற்சியின்போது 70 கிலோ வெயிட் லிஃப்டிங் செய்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.