சென்னை: தெலுங்கில் சூப்பர் ஹிட்டான 'தேவி நேனி' என்ற திரைப்படம் தமிழில் ‘மதுரை சிங்கம்’ என்ற பெயரில் வெளியாகிறது.
சாதி, மதம், வகுப்புவாதம் தலைதூக்குகிறது. இதை பயன்படுத்தி சில வன்முறையாளர்கள் மாணவர்களை மிரட்டி பணம் பறிப்பதும், அவர்களை தவறான செயல்களுக்காகவும் அரசியல் லாபங்களுக்காகவும் பயன்படுத்தும் போக்கும் உள்ளது.
இதை எதிர்க்கும் கதையின் நாயகன் சிம்ஹா, வன்முறையாளர்களை அடித்து துவம்சம் செய்கிறான். மாணவர்களை ஒருங்கிணைத்து, வன்முறையின் பின்னணியில் இருக்கும் பல்வேறு முடிச்சுகளை அவிழ்க்கிறான். இதுதான் மதுரை சிங்கம் திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.
'தேவி நேனி' என்ற பெயரில் தெலுங்கில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், தமிழில் டப் செய்யப்பட்டு தற்போது ‘மதுரை சிங்கம்’ என்ற பெயரில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் என்.டி. ஆர்-இன் பேரன் தாரக், அடிதடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். நவீனா கதாநாயகியாகவும், அர்ஜூன் தேஜா, சுரேஷ், அன்னபூர்ணா, தனிஷ்கா, கோட்டி உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிரஞ்சீவி, கிருஷ்ணா, நாகேந்திர பிரசாத், சுமன் ஆகியோர் கதாநாயகனாக நடித்த படங்களை இயக்கியவரும், பாலிவுட் பிரபலமான சோனு ஷூட்-ஐ தெலுங்கில் முதல் முதலாக அறிமுகபடுத்தியவருமான நர்ரா ஷிவநாகு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
எவரெஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் சார்பாக, ஆப்பிள் மூவி மீடியாஸ் நிறுவனம் படத்தை தமிழில் உருவாக்கியுள்ளது. திவ்யா சுந்தரவடிவேலு படத்தை தயாரித்துள்ளார்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை விவரிக்கும் 'கிரீன் சில்லீஸ்'