ETV Bharat / sitara

மணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராகும் சித் ஸ்ரீராம்!

இயக்குநர் மணிரத்னம் தயாரிக்க உள்ள 'வானம் கொட்டட்டும்' படத்திற்கு பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பளராக அறிமுகமாகிறார்.

author img

By

Published : Jul 10, 2019, 9:28 AM IST

சித் ஸ்ரீராம்

வசீகர குரலால் ரசிகர்களை மயங்க வைத்து வரும் சித் ஸ்ரீராம், மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில், பாடிய பாடல்கள் எல்லாம் ரசிகர்களின் மனதில் ரிங்டோனாக ஒலிக்க ஆரம்பித்தன. இவர் பாடிய 'தள்ளி போகாதே' பாடல் ஆல்டைம் பேவரைட்டாக இருந்து வருகிறது. தமிழில் மட்டும் பாடிக்கொண்டிருந்த இவர் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கும் இவர் பாடிய பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

ரசிகர்கள் இவரது குரலில் ஒலிக்கும் பாடலை கேட்டு கொண்டாடி மகிழ்கின்றனர். இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் தயாரிக்கவுள்ள 'வானம் கொட்டட்டும்' படத்தில் சித் ஸ்ரீராம் இசையமைப்பளராக அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'படைவீரன்' படத்தை இயக்கிய தனா இயக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். மடோனா செபஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நாயகியாக நடிக்கின்றனர்.

முன்னதாக இப்படத்திற்கு '96' கோவிந்த் வசந்தா இயக்க இருப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்னையால் அவர் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக சித் ஸ்ரீராமை இசையமைப்பளராக மணிரத்னம் அறிமுகப்படுத்துகிறார்.

Intro:Body:

Now, Sid sriram as a music director 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.