ETV Bharat / sitara

'ஆர்ட் ஆஃப் எடிட்டிங்' பயிற்சி அளிக்கும் 'நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்'

சென்னை: 'நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்' நிறுவனம் தற்போது 'ஆர்ட் ஆஃப் எடிட்டிங்' என்னும் பயிற்சி வகுப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்
நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்
author img

By

Published : Jul 18, 2020, 5:08 PM IST

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் 'நெஞ்சே எழு', இளையராஜாவின் 'லைவ் இன் கச்சேரி சிங்கப்பூர்', 'வாய்ஸ் ஆஃப் லெஜண்ட்ஸ்', 'மடை திறந்து' போன்ற சினிமா கச்சேரிகளை நடத்திய நிறுவனம் "நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்".
இதுமட்டுமல்லாது நடிகர் விஜய சேதுபதியுடன் இணைந்து நம்ம ஊரு ஹீரோ, சூர்யா சூப்பர் சிங்கர், இளையதளபதி விஜய்யின் "மாஸ்டர்" ஆடியோ வெளியீடு போன்ற நேரடி நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளனர்.

ஆர்ட் ஆஃப் எடிட்டிங்
ஆர்ட் ஆஃப் எடிட்டிங்
"நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ்" நிறுவனம், தற்போது ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க , “ஆர்ட் ஆஃப் எடிட்டிங்” பயிற்சி அளிக்க முடிவெடுத்துள்ளது. திரை உலகில் சாதிக்க நினைக்கும் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினருக்கு இந்நிறுவனத்தில் பயிற்சி அளித்து நல்ல எடிட்டர்களை உருவாக்கி உலக அரங்கிற்குப் பயன்படுத்தத் திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனத்தினர் கூறுகையில், 'ஆர்ட் ஆஃப் எடிட்டிங்' என்பது உலகெங்கிலும் வளர்ந்து வரும் எடிட்டர்களுக்கு அவர்களின் திறனை மேம்படுத்த உதவும் வகையில் பயிற்சியளிப்பதற்கான புதியப் படியாகும்.
இன்றைய சூழ்நிலையில், இந்தக் கட்டத்தில் இந்தப் பாடத்திட்டத்தைத் தொடங்குவது ஏராளமான ஆர்வலர்களுக்கு அவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்கும், சமீபத்திய நுட்பங்களை புதுப்பித்து மேம்படுத்துவதன் மூலம் அவர்களின் அறிவையும், திறமையையும் மேம்படுத்துவதற்கு பயனளிக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஆன்லைன், ஆஃப்லைன் படிப்புகளுக்கு தலா 2 தனித்தனி நேரம் ஒதுக்கீடு செய்து வகுப்புகளை ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தில் பைனல் கட் புரோ எக்ஸ், பிரீமியர் புரோ, போட்டோஷாப் ஆகியவை அடங்கும்.

ஆர்வமுள்ளவர்கள் connect@noiseandgrains.com என்ற மின்னஞ்சல் மூலமாக எங்களுடன் தொடர்புக் கொண்டு பயன்பெறலாம் எனக் கூறியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.