ETV Bharat / sitara

தல ரசிகர்களை ஏமாற்றிய தயாரிப்பாளர் போனி கபூர்! - valimai movie update

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் ’வலிமை’ படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் தற்போது வெளியாகாது என்று தயாரிப்பாளர் போனி கபூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தல ரசிகர்களை ஏமாற்றிய தயாரிப்பாளர் போனி கபூர்

author img

By

Published : Apr 30, 2020, 1:07 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும், தல அஜித்தின் பிறந்தநாள் மே 1ஆம் தேதி (நாளை) என்பதால் அதை கொண்டாட அவரது ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இம்முறை கரோனா வைரஸ் தொற்று காரணமாக அஜித் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று அறிவித்தார்.

அதேபோல் அஜித் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்துவரும் ’வலிமை’ படத்தின் போஸ்டர் அல்லது படத்தின் அப்டேட் வெளியிடுங்கள் என தொடர்ந்து தயாரிப்பாளர் போனி கபூரை ரசிகர்கள் சமூக வலைதளபக்கங்களில் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ’வலிமை’ படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பு வெளியாகாது என்று தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கோவிட்-19 என்னும் கரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில் அகில உலகமே போராடிக் கொண்டு இருக்கும் இந்தத் தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்துக்கும் எந்தவிதமான, விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம், நம் நலம் காப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு 25% நடந்து முடிந்த நிலையிலும், படத்தின் ஒரு அப்டேட்கூட இதுவரை வெளியாகவில்லை. அஜித் பிறந்தநாளையொட்டி அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த ரசிகர்கள், போனி கபூரின் இந்தப் பதிவு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

இதையும் படிங்க: பிறந்தநாள் கொண்டாடுவதற்கு தடைவிதித்த நடிகர் அஜித்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.