ஜேம்ஸ் பாண்ட் ஹாலிவுட் திரைப்பட வரிசையில் 25ஆவது படமாக உருவாகி வருகிறது 'நோ டைம் டூ டை'. உலக அளவில் பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள இந்த ஜேம்ஸ் பாண்ட் சீரிஸில் 7ஆவது நாயகனாக பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரேய்க் நடித்து வருகிறார்.
கேசினோ ராயல் தொடங்கி, குவாண்டம் ஆஃப் சோலேஸ், ஸ்கை ஃபால், ஸ்பெக்டர் படங்களைத் தொடர்ந்து 'நோ டைம் டூ டை' பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இதிலிலும் ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் டேனியல் கிரேய்க் தனது மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தற்போது ஜேம்ஸ் பாண்டின் மிரட்டலான 'நோ டைம் டூ டை' படத்தின் 2 நமிடம் 30 நொடி கொண்ட டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டு ஸ்பெக்டர் திரைப்படம் வெளியாகியிருந்த நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 2020 ஏப்ரல் மாதம் 'நோ டைம் டூ டை' வெளியாகிறது.
-
"Bond… James Bond” – The first trailer for #NoTimeToDie is here! In cinemas April 2020 #Bond25 #BondJamesBond pic.twitter.com/Xo1pSYHgbc
— James Bond (@007) December 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">"Bond… James Bond” – The first trailer for #NoTimeToDie is here! In cinemas April 2020 #Bond25 #BondJamesBond pic.twitter.com/Xo1pSYHgbc
— James Bond (@007) December 4, 2019"Bond… James Bond” – The first trailer for #NoTimeToDie is here! In cinemas April 2020 #Bond25 #BondJamesBond pic.twitter.com/Xo1pSYHgbc
— James Bond (@007) December 4, 2019
இந்தப்படத்தில் ராமி மாலெக் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, ரால்ப் பெய்னெஸ், நவோமி ஹாரிஸ், ரோரி கிண்ணியர், லியா செய்டாக்ஸ், ஜெஃப்ரி ரைட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மெட்ரா கோல்ட்வைன் மேயர், யூனிவர்சல் பிக்சர்ஸ், இயான் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குநர் கேரி ஜோஜி ஃபுகுநாகா இயக்குகிறார்.
ஸ்பை வேலையை விடுத்து ஜமைக்கா நாட்டில் தனது வாழ்க்கையை அமைதியாக தொடரும், ஜேம்ஸ் பாண்ட்-ஐ தேடி வரும் சிஐஏ மற்றும பழைய நண்பரின் வேண்டுகோளை ஏற்று கடத்தப்பட்ட விஞ்ஞானி ஒருவரை மீட்கும் பணியில் களமிறங்குகிறார். இதன் பின்னர் வழக்கமான அதிரடி ஆக்ஷன், சாகசங்கள், ரொமாண்ஸ் என பாண்ட் படங்களுக்கே உரித்தான அதகளத்துடன் 'நோ டைம் டூ டை' படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
'மதுரையின் முகவரிகள்' - பொக்கிஷங்களை நினைவுகூறும் 'சீனுராமசாமி'