ETV Bharat / sitara

ஒரே அட்வைஸ், மூனு பேரும் கேட்கல! - அமிதாப் பச்சன் - ரஜினியின் அரசியல் பயணம்

சிரஞ்சீவி, ரஜினி, பவன் கல்யாண் ஆகிய மூவரும் தனது அறிவுரையை ஏற்கவில்லை என பாலிவுட் Big B அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

Amitabh about political entry of Chiranjeevi, Rajini and pawan kalyan
author img

By

Published : Sep 29, 2019, 1:03 PM IST

‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்துள்ள அமிதாப் பச்சன், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் கூறிய அறிவுரையை சிரஞ்சீவி, ரஜினி, பவன் கல்யாண் ஆகிய மூவரும் ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சிரஞ்சீவியுடன் இணைந்து பேட்டியளித்த அமிதாப், அரசியலில் நுழையும் தவறை மட்டும் செய்துவிடாதீர்கள் என சிரஞ்சீவுக்கு அறிவுரை வழங்கினேன். ஆனால் அவர் அந்தத் தவறை செய்தார். என்னுடைய அறிவுரையை கேட்கவில்லை. இதே அறிவுரையை ரஜினியிடமும், சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணிடமும் கூறினேன். அவர்களும் என்னுடைய அறிவுரையை ஏற்கவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் அவர், பவன் கல்யாண் தீவிர அரசியல் நாட்டம் உடையவர் என சிரஞ்சீயின் முன்னிலையில் தெரிவித்தார். சிரஞ்சீவியும், பவன் கல்யாண் அரசியலில் இருக்க தகுதியான நபர் என்பதை ஒப்புக்கொண்டார்.

சிரஞ்சீவி, தமன்னா, நயன்தாரா, அனுஷ்கா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன் என நட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ள ‘சைரா நரசிம்ம ரெட்டி’ வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. சினிமா ரசிகர்கள் இந்த படத்தைக் காண பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.