குறைந்த வெளியீட்டில் அதிகப் பணம் கேட்பதால், கேராளவில் பிகில் படத்தை வாங்க விநியோகிஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
'தெறி', 'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும், இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
பெரும் பொருட்செலவில் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவ்வருட தீபாவளி விருந்தாக பிகில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதனையடுத்து இப்படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியாக உள்ளது.
தற்போது '#விலைபோகாத_Bigil' என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கேரளாவில் இப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் யாரும் வரவில்லை. காரணம் பிகில் குறைந்த வெளியீட்டிற்கு அதிக பணம் கேட்டதால், யாரும் வாங்க முன் வரவில்லை என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தை 'மேஜிக் ப்ரேம்' நிறுவனம் மூலம் கேரளாவில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் வாசிங்க: ’வெறித்தனமான' நடனத்துடன் நன்றி தெரிவித்த சாண்டி!