ETV Bharat / sitara

நிவின் பிறந்தநாளன்று 'மூத்தோன்' ட்ரெய்லர்!

author img

By

Published : Oct 9, 2019, 4:59 PM IST

அண்ணனை தேடும் ஒரு தம்பியின் கதையை த்ரில்லர் ஜானரில் 'மூத்தோன்' என்ற பெயரில் இயக்கியிருக்கிறார் கீது மோகன்தாஸ்.

moothon

நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள மூத்தோன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

தேசிய விருது பெற்ற ‘லையர்ஸ் டைஸ்’ படத்தை இயக்கிய கீது மோகன்தாஸின் அடுத்த படைப்பு ‘மூத்தோன்’. இதில் நிவின் பாலி, சசங் அரோரா, சோபிதா துலிபலா, மெலிசா ராஜு தாமஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

moothon
நிவின் பாலி ட்வீட்

செப்டம்பர் 5 முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்ற டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘மூத்தோன்’ படம் திரையிடப்பட்டது. இதற்காக படக்குழுவினர் அங்கு சென்றிருந்தனர். இத்திரைப்படம் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மலையாளம், இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தியில் அனுராக் கஷ்யப் இதற்கு வசனம் எழுதியுள்ளார்.

இதன் டீசர் ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை நிவின் பாலி பிறந்தநாளான அக்டோபர் 11 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதையும் வாசிங்க: சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வான நிவின் பாலி படம்!

Intro:Body:

moothoon

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.