புகழ்பெற்ற எழுத்தாளர் எம். முகுந்தனின் கதையை தழுவி உருவாகியுள்ள திரைப்படம் 'மஹாவீர்யார்'. நிவின் பாலி, ஆஷிஃப் அலி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஃபேண்டஸி, டைம் ட்ராவல், சட்ட நுணுக்கங்கள் உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி நேற்று (பிப்.11) கொச்சியில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர் எம். முகுந்தன், படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார். இயக்குநர் அப்ரித் ஷைனி, ஆஷிஃப் அலி, ஷான்வி ஶ்ரீவஸ்தவா உள்ளிடோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிவின் பாலி, இயக்குநர் அப்ரித் ஷைனி கூட்டணி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணைகிறது. கரோனா காலகட்டங்களுக்கிடையே ராஜஸ்தான், கேரளா உள்ளிட்ட இடங்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: நியாயத்துக்கு பக்கம் நிக்கிறதுதான் நியூட்ரல் - உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி!