ETV Bharat / sitara

'நிசப்தம்' வதந்திகளை நம்பாதீர்கள் - தயாரிப்பு தரப்பு

author img

By

Published : Apr 23, 2020, 1:13 PM IST

"படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த நாள்வரை எங்களது குழு எங்களுக்கு முழு ஒத்துழைப்பும் அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக அனுஷ்கா எங்களது நல்ல நேரம், கெட்ட நேரம் என அனைத்திலும் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார்".

anushka
anushka

அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள 'நிசப்தம்' படம் ஆன்லைனில் வெளியாவது குறித்து தயாரிப்பு தரப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படத்தில் 'தேவசேனா' கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'பாகமதி' படத்திற்கு பின் திரையுலகிலிருந்து விலகியிருந்தார்.

தற்போது அனுஷ்கா, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் ‘நிசப்தம்’ எனும் திரைப்படத்தில் நடித்துவருகிறார். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனுஷ்கா, நடிகர் மாதவனுடன் ஜோடி சேர்ந்துள்ளார். இவர்களுடன் அஞ்சலி, ஷாலினி பாண்டே, சுப்பராஜு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை பீப்புள் மீடியா ஃபேக்டரி - கோனா ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்து. ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாக இருந்த படம் கரோனா அச்சம் காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கரோனா அச்சம் காரணமாக அனைத்து படங்களின் வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சில படங்களை ஆன்லைனில் வெளியிட அந்த அந்த படக்குழு திட்டமிட்டு வருகிறது.

அந்த வகையில் நிசப்தம் படமும் ஆன்லைனில் வெளியாகும் என சில தினங்களாக சமூகவலைதளத்தில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திக்கு தயாரிப்பு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

அதில், "இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். கண்டிப்பாக இந்த படம் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகாது. படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்த நாள்வரை எங்களது குழு எங்களுக்கு முழு ஒத்துழைப்பும் அளித்துள்ளது. அதிலும் குறிப்பாக அனுஷ்கா எங்களது நல்ல நேரம், கெட்ட நேரம் என அனைத்திலும் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். இப்படம் குறித்து ஏதேனும் முக்கிய அறிவிப்பு இருந்தால் நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.