இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் என்.ஜி.கே. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு தொடங்கிய படத்தின் படப்படிப்பு, பல்வேறு காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. படத்தின் வெளியீடு எப்போது என்று வெகு நாட்களாக காத்திருந்த சூர்யா ரசிகர்களுக்கு, மே 31ஆம் தேதி படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்து சர்பிரைஸ் கொடுத்தது.
இதையடுத்து இப்படத்தின் டீசர் மற்றும் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரும், முழு ஆடியோவும் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.