அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. தொடர்ந்து 'வலிமை' படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'வலிமை' படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தைத் தொடர்ந்து 'விஸ்வாசம்' படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்திலும் அஜித் நடிக்க உள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தை இயக்கும் இயக்குநர் யார் என இன்னும் முடிவாகவில்லை. இப்படத்திற்கு அஜித் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தேதி ஒதுக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு அஜித் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: BMW பைக்கில் மாஸாக பறந்த அஜித்: வைரலான புகைப்படம்