சென்னை: நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வரும் நெற்றிக்கண் படத்தின் டீஸரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அவள் என்ற ஹாரர் - திரில்லர் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இந்தப் படத்தை இயக்குகிறார். படத்தில் கதையின் நாயகியாக பார்வையற்ற பெண் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். அஜ்மல், மணிகண்டன், சரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்தப் படத்தின் டீஸர் காட்சிகள் ரத்தம் சொட்ட சொட்ட மிரள வைக்கும் விதமாக உள்ளது. ஆடுகளை கொடூரமாக சூறையாடும் நரியை வேட்டையாடுவது போன்ற உரையாடலில் விறுவிறுப்பான காட்சிகளோடு அமைந்துள்ள டீஸர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
படத்துக்கு ஒளிப்பதிவு - ஆர்.டி. ராஜசேகர். இசை - கிரிஷ் கோபாலகிருஷ்ணன். தயாரிப்பு - ரவுடி பிக்ஸர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன்.
நயன்தாரா இன்று (நவ. 18) தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:”விதிகளை உடைத்து புதிய விஷயங்களை பரிசோதித்துப் பார்த்திருக்கிறேன்” - நடிகை சமந்தா