கெய்பா பிலிம்ஸ் தயாரிப்பில் நெப்போலியன் நடித்த முதல் ஆங்கிலப் படம் 'டெவில்ஸ் நைட்'. இந்தப் படம் இன்று டிஜிட்டல் தளமான ஓடிடியில் வெளியானது. அமெரிக்கா, கனடாவில் அமேசான், ஆப்பிள், ஃபன்டாங்கோ, நவ், வுடு உள்ளிட்ட இணையதளங்கள் மற்றும் டிவிடியில் வெளியாகிறது.
ஆரோன் ஹெர்மன் ருஸ்மேன் எழுதியிருக்கும் பரபரப்பான திரைக்கதையை ஸாம் லோகன் காலெகி விறுவிறுப்பு குறையாமல் இயக்கியிருக்கிறார். ஜெஸி ஜென்ஸன் மற்றும் நாதன் கேன் மாதெர்ஸ் உடன் நடிகர் நெப்போலியன் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் நடிகர் நெப்போலியன் ஹாலிவுட்டில் தடம் பதித்துள்ளார்.
டெவில்ஸ் நைட் படத்தில் நெப்போலியன் இதுகுறித்து தயாரிப்பாளர் டெல் கணேஷ் கூறுகையில், சாகசங்கள் நிறைந்த கிரைம் த்ரில்லர் பாணி படம் இது. டெட்ராய்ட்டை அடுத்திருக்கும் சிறிய நகரம் ஒன்றில் தொடர்ந்து கொலைகள் நடப்பதையும், அதை இரு காவல் துறை அலுவலர்கள் துப்பறிவதும்தான் கதை. கதையோட்டத்தில், அமானுஷ்யமான நைன் ரோக் நுழைவதிலிருந்து, பார்ப்பவர்கள் இருக்கையின் நுனியில் அமரவைக்கும். மனிதனும் மனிதன் அல்லாத இருள்சூழ் உலகவாசிகளும் விசித்திரமான கோர சம்பவங்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. படத்தில் வரும் ஒரு காட்சி இதில்வரும் பெண் கதாபாத்திரம் ராணுவப் பின்புலத்தோடு மிடுக்காகத் தோற்றமளிக்கிறார். நடிப்பும் அச்சு அசல் ராணுவ அலுவலரை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. படத்தின் முடிவு சற்றும் எதிர்பாராதது. ஆனால், ஆளை அசத்தும் முடிவு. ஒளிப்பதிவு, தயாரிப்பு, ஒலியமைப்பு, எடிட்டிங் போன்ற துறையில் அவர்கள் தங்கள் முழுத் திறமையை இந்தப் படத்தில் பயன்படுத்தி உள்ளனர்” என்று கூறினார்.இதையும் படிங்க:தமிழில் புதிதாக தொடங்கப்பட்ட 'ஃப்ளிக்ஸ்டா' ஓடிடி டிஜிட்டல் தளம்