தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்குப் பல திரைப்படங்கள் வெளியாகின்றன. அவ்வாறு வெளியாகும் திரைப்படங்களில் உள்ள பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகுவதில்லை. ஒரு சில பாடல்கள் மட்டுமே ரசிகர்களின் மனதைக் கவர்கிறது.
அதிலும் குறிப்பாக இந்த டிஜிட்டல் உலகத்தில் யூ-டியூப் தளத்தில் எந்தப் பாடலை ரசிகர்கள், அதிகமாக பார்க்கிறார்களோ அந்த பாடலே வெற்றி பெற்ற பாடல் ஆகும். இந்நிலையில், விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான, இமைக்கா நொடிகள் படப் பாடல் ஹிட் ஆகியுள்ளது.
அதாவது கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் உள்ள 'நீயும் நானும் அன்பே' பாடல் யூ-டியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதை இமைக்கா நொடிகள் பட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.