தமிழ் தொலைக்காட்சிகளிலிருந்து வந்த சிலர் சினிமாவில் உச்சத்திற்கு சென்றுள்ளனர். உதாரணமாக சின்னத்திரையில் கலக்கிய சந்தானம், சிவகார்த்திக்கேயன் ஆகியோர் தமிழ் சினிமாவில் தங்களுக்கென்று தனி முத்திரை பதித்ததோடு பெரும் ரசிகர் பட்டாளத்தையும் கொண்டுள்ளனர்.
அந்த வரிசையில் ரியோ, கவின் ஆகியோரும் ஹீரோவாக நடித்தனர். அந்த வரிசையில் 'நீயா நானா' என்னும் நிகழ்ச்சி மூலமாக மக்களிடையே பிரபலமடைந்த கோபிநாத், தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.
விஜயகாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான 'கண்ணுப்பட போகுதய்யா' படத்தை இயக்கிய பாரதி கணேஷ் இயக்கும் இந்தப் புதிய படத்தில் கோபிநாத் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்திற்கு 'இது எல்லாத்துக்கும் மேல' என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் பல குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பதாகவும் விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. கோபிநாத் முன்னதாக ஜெயம் ரவியின் 'நிமிர்ந்து நில்', ஜீவாவின் 'திருநாள்' ஆகிய படங்களில நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.