தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா இன்று (நவ.18) தனது 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது நயன்தாரா நடித்து வரும் படங்களின் படக்குழுவினரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் விதமாக அவரது கதாபாத்திரம் தொடர்பான போஸ்டர்களை வெளிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நயனின் புதிய படமான ’கனெக்ட்’ குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 'நெற்றிக்கண்' படத்தைத் தொடர்ந்து ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திகில் படமான கனெக்டில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக அவரது 'மாயா' படத்தை இயக்கிய அஸ்வின் சரவணனே இப்படத்தையும் இயக்கவுள்ளார். இதில் நயன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் நடிகர் சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம் கெர் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
-
Here’s the announcement you’ve been waiting for! Presenting to you the first look of #Connect on this very special day 🤗😬#HBDNayanthara #Connect #ConnectFirstLook @VigneshShivn @AnupamPKher #Sathyaraj @Ashwin_saravana pic.twitter.com/1Pardgywy8
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) November 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here’s the announcement you’ve been waiting for! Presenting to you the first look of #Connect on this very special day 🤗😬#HBDNayanthara #Connect #ConnectFirstLook @VigneshShivn @AnupamPKher #Sathyaraj @Ashwin_saravana pic.twitter.com/1Pardgywy8
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) November 18, 2021Here’s the announcement you’ve been waiting for! Presenting to you the first look of #Connect on this very special day 🤗😬#HBDNayanthara #Connect #ConnectFirstLook @VigneshShivn @AnupamPKher #Sathyaraj @Ashwin_saravana pic.twitter.com/1Pardgywy8
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) November 18, 2021
'கனெக்ட்' திரைப்படத்தின் போஸ்டரில் நயன்தாரா பேய், ஆவிகளிடமிருந்து தற்காத்து கொள்ள புனித நீரால் சுவற்றில் கிறிஸ்தவர்களின் அடையாளமான சிலுவையை வரைவது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் 'கனெக்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.