இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் மும்பையில் கடந்த 10ஆம் தேதி ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தின் நாயகி நயன்தாரா இன்று முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்கிற செய்தியை தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தர்பார் படத்திற்கு அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இதற்கு முன்பாக சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களில் நயன்தாரா, ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.