ETV Bharat / sitara

ஓணம் வெளியீடாக 'ஷோபா' நயன்தாராவின் 'லவ் ஆக்சன் ட்ராமா' - லவ் ஆக்சன் டிராமா

நயன்தாரா நடிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் 'லவ் ஆக்சன் ட்ராமா' படத்தின் டீசர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Nayantara
author img

By

Published : Aug 23, 2019, 8:40 PM IST

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவர் நடிகை நயன்தாரா. தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை தென்னிந்திய முழுவதும் வைத்துள்ளார். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தாலும், இவர் அவ்வப்போது மலையாள சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், மலையாளத்தில் நடிகர் நிவின் பாலியுடன் நயன்தாரா 'லவ் ஆக்சன் ட்ராமா' என்னும் படத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரஜன், அஜூ வார்கீஸ், வினித் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜாமோன் ஜான் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தை மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர் ஸ்ரீனிவாசனின் மகன் தயன் ஸ்ரீனிவாசன் இயக்குகிறார். ஓணம் பண்டிகையின் போது வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில், இப்படத்தில் நிவின் பாலி, நயன்தாராவின் ஆகியோரது கதாபாத்திரத்தின் பெயரை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Nayantara
நயன்தாரா ட்வீட்

அதன்படி, நிவின் பாலி தினேஷன் பெயரிலும், நயன்தாரா ஷோபா பெயரிலும் நடிக்க உள்ளனர். ஏற்கனவே நயன்தாரா இப்படத்தை பற்றி கூறுகையில், மலையாளப் படங்களில் கதைக்கு எப்போதும் முக்கியத்துவம் இருக்கும். காதல் கதைகளையும் ஆழமாகவே பதிவு செய்வார்கள். இப்படம் காதல் படங்களில் இருந்து வித்தியாசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது, என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் படத்தின் டீசர் நாளை வெளியாகும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Intro:Body:

https://twitter.com/NayantharaU/status/1164884575060783105

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.